மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
மோகன்லால் நடித்த சூப்பர்ஹிட் படமான புளிமுருகன் படம் 150 கோடி ரூபா வசூலித்ததையும் வெற்றிகரமாக 150 நாட்கள் ஓடியதையும் கொண்டாடும் விதமாக நேற்று புலி முருகன் 150வது நாள் விழா கொண்டாடப்பட்டது.. மோகன்லால் உட்பட படத்தில் இடம்பெற்ற படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட மோகன்லால் இந்தப்படத்தின் வெற்றிக்கு துணைநின்ற அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், தற்போது தான் நடித்துவரும் படத்தின் ரிலீஸ் தேதியையும் வித்தியாசமான முறையில் அறிவித்தார்..
இது குறித்து சிறிய அளவிலான மூன்று வீடியோக்களை பதிவேற்றியுள்ள மோகன்லால் அதில் இரண்டு வீடியோக்களில் புலியின் முகத்துடன் இருப்பது போலவும் மூன்றாவது வீடியோவில் டக்கென உருவம் மாறி தனது சுய முகத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுவது போலவும் அசத்தியுள்ளார். மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் தற்போது நடித்து முடித்துள்ள '1971 - பியாண்ட் பார்டர்ஸ்' என்கிற படத்தின் ரிலீஸ் தேதிதியைத்தான் மோகன்லால் அறிவித்துள்ளார். வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக ஏப்-9ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.