ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நாகார்ஜூனா நடிப்பில் சொக்கடே சின்னி நயன எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா அடுத்து இயக்கவிருக்கும் படத்தை நாகார்ஜூனாவே தயாரிக்கின்றார். அப்படத்தில் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா நாயகனாக நடிக்கின்றார். நாயகியாகளாக ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் லாவண்யா திரிபதி நடிக்கவுள்ளனர். அல்லரி அல்லுடு என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் திருமண காட்சிக்காக அண்ணபூர்னா ஸ்டுடியோஸில் ரூ 2 கோடி செலவில் பிரம்மாண்ட மணமேடை தயாராகி வருகின்றதாம். இத்தகவல் வெளியானதிலிருந்து இப்படத்தில் நாக சைதன்யா மணமுடிக்கப்போவது ராகுல் ப்ரீத்தி சிங்கையா அல்லது லாவண்யா திரிபதியையா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர. நிஜத்தில் நடிகை சமந்தாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நாகசைதன்யா திரைப்படங்களில் நடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்