ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவின் மைக்கில்ஜாக்சன் என பெயரெடுத்தவர் நடிகர் பிரபுதேவா. பிரபுதேவாவின் நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக முன்னணி நடிகர்களை ஆட வைத்துள்ளார் பிரபுதேவா. கூகுள் இணையதளத்தில் இந்தியாவின் சிறந்த நடனக்கலைஞர்களில் பிரபுதேவாவை பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் முந்திவிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபுதேவா ஜூனியர் என்.டி.ஆரின் நடனத்திறமையை பலமுறை பார்த்து வியந்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் அண்மையில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஜனதா கேரேஜ் படத்தில் அவரது நடனத்தைப் பார்த்தது முதல் அவரது ரசிகனாக மாறிவிட்டதாகவும் பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார். டோலிவுட்டின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தேர்ந்த நடன கலைஞரும் கூட. முறைப்படி பரத நாட்டியம் பயின்றுள்ள ஜூனியர் என்.டி.ஆர் மார்டன் ஹிப்பாப், குச்சுப்புடி, போன்றவற்றையும் கற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.