Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“மோகன்லாலை விட வயசு கம்மி தானே” - நடிகரை உசுப்பேற்றிய மம்முட்டி...!

07 பிப், 2017 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Mammootty-encourage-actor

கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே' பிரதிகாரம்' படம் மூலம் 'பேபி சேட்டன்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அலான்சியர் லே லோபஸ் என்பவர் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டார். அதன்பின், துல்கரின் 'கம்மட்டிப்பாடம்' படத்தில் ரவுடி ஒருவரின் வலது கையாக மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தில் வரலட்சுமியின் தந்தையாக ஒரு 'பிம்ப்' கேரக்டரில் வெகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜானி ஆண்டனி இயக்கிய தோப்பில் ஜோப்பன்' படத்திலும் மம்முட்டியின் கபடிக்குழு நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்..


அந்தப்படத்தில் கபடி போட்டி காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது மம்முட்டி அணியில் இருக்கும் எதிர் அணியில் உள்ள வீரர் பாடி வரும்போது, அலான்சியர் அவரை பிடிக்க முயற்சிப்பது போலவும், அந்த வீரர் அவரை தூக்கி வீச, அலான்சியர் மம்முட்டி காலுக்கு அருகில் சென்று விழுவது போலவும் காட்சியை படமாக்கிகொண்டு இருந்தார் ஜானி ஆண்டனி.. அப்போது ரிகர்சல், ரீ-டேக் என இரண்டு மூன்று முறை இவ்வாறு நடந்ததாம்.


அதனால் அவருக்கான காட்சியை மாற்றி அமைக்கலாம் என இயக்குனர் ஜானி ஆண்டனி சொன்னாராம். ஆனால் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மம்முட்டி, அப்படி எதுவும் மாற்ற வேண்டாம் என்றாராம். இல்லை அவர் வயசுக்கு இது கொஞ்சம் ரிஸ்க் இல்லையா என இழுத்தாராம் இயக்குனர். அலான்சியரை அழைத்த மம்முட்டி உங்கள் வயது என்ன என கேட்க, அதற்கு இவர் இன்னும் இரண்டு வயதை கூட்டி, 53 வயது என்றாராம். “மோகன்லாலை விட உங்களுக்கு மூன்று வயது குறைவுதான் 56 வயதான மோகன்லால் அவ்வளவு ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது, உங்களால் இந்த காட்சியில் நிச்சயமாக நடிக்க முடியும்” என ஊக்கம் கொடுத்து, அந்த காட்சியை மாற்றாமலேயே அவரை நடிக்க வைத்தாராம் மம்முட்டி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in