ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
மலையாள சினிமாவை பொறுத்தவரை 'மேட் பார் ஈச் அதர்' என சொல்லப்படுகின்ற மிகச்சில ஜோடிகளில் பிருத்விராஜ்-மம்தா மோகன்தாஸ் ஜோடியும் ஒன்று. அன்வர், செல்லுலாய்ட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறது. படத்தின் பெயர் 'டெட்ராய்ட் கிராஸிங்'. அவரது பாசறையில் இருந்து இப்போது இயக்குனராக மாறியுள்ளார் பிருத்விராஜ் - நிவின்பாலி இருவரும் இணைந்து நடித்து, கடந்த 2015ல் வெளியான 'இவிடே' படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த நிர்மல் சகாதேவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.
அமெரிக்காவின் மெக்ஸிகன மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் உள்ள ஸ்ட்ரீட் கேங்ஸ் பற்றிய கதை தான் இது. அதனால் தான் படத்திற்கு 'டெட்ராய்ட் கிராஸிங்' என டைட்டில் வைத்துள்ளனர். டெட்ராய்டில் பல்வேறு ஸ்ட்ரீட் கேங்ஸ் இயங்கி வருகின்றன. அங்கே நம் தமிழ் ஆட்களும் தனித்தனியாக ஸ்ட்ரீட் கேங் உருவாக்கி வைத்துள்ளார்களாம். இவர்களுக்குள் நடக்கும் மோதல், இந்த கேங் ஒன்றில் இருக்கும் நாயகன் பிருத்விராஜ், இதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பது தான் படத்தின் கதையாம். இது மலையாளப்படம் தான் என்றாலும் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டாலும் கூட ஆச்சர்யமாக தமிழ் சம்பந்தமான விஷயங்கள் தான் படத்தில் நிறைய இருக்கிறதாம். அதனால் படத்தையும் மலையாளம், தமிழ் என இருமொழியில் உருவாக்குகிறார்களாம்.