ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு முன்னதாக இன்னொரு படத்திற்கு கதை எழுதிகொடுத்துவிட்டு வந்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. படத்தின் பெயர் லட்சியம்.. ஆனால் இந்தப்படத்திற்கு கதை மட்டுமே எழுதியிருக்கிறார் ஜீத்து ஜோசப்.. படத்தை இயக்குவது அவரது நண்பரான அஸார் கான் என்கிற இயக்குனர்.. இந்தப்படத்தின் நாயகர்களாக பிஜூ மேனன் மற்றும் இந்திரஜித் இருவரும் நடிக்கிறார்கள்.. கதாநாயகியாக 'நெடுஞ்சாலை' புகழ் ஷிவதா நடிக்கிறார். கடந்த சில தினங்களாக இந்தப்படத்தின் படப்படிப்பு கேரள மாநிலம் சாலக்குடி அருகேயுள்ள புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே நடைபெற்று வந்தது..
இரண்டு தினங்களுக்கு முன் ஒருநாள் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் பாறைகளின் மீது தாவித்தாவி ஓடிவந்து பிஜூமேனன் கீழே குதிக்கும் காட்சியை படமாக்கினார்கள். அப்போது தவறுதலாக கால் தடுமாறி, குதிக்கும்போது கையை ஊன்றிவிட்டார். இதனால் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்படவே ஷூட்டிங் நிறுத்தப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கையில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் சில நாட்கள் சிகிச்சைக்குப்பின்னரே அவரால் வழக்கம்போல நடிக்கமுடியும் என்றும் கூறிவிட்டார்களாம். அதனால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்களாம்.