ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் ஹீரோவாக நடித்து ட்ரெய்ல் பார்த்தார் சந்தானம். அந்த படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கிடைக்கவே அடுத்தபடியாக தில்லுக்குத் துட்டு படத்தில் நடித்தவர், தற்போது சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி என ஒரே நேரத்தில் பல படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் மூன்று படங்களுக்கு ஹிட் பாடல்களின் வரிகளை டைட்டீலாக வைத்திருப்பவர், இந்த பாணியை தொடரப் போகிறாராம். மேலும், சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும் படங்களில் நடித்து முடித்து விட்டவர் சக்க போடு போடு ராஜா படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று ஜனவரி 21-ந்தேதி சந்தானத்தின் பிறந்த நாள் என்பதால், தனது ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அதோடு, இதுவரையில்லாத அளவுக்கு அவரது இந்த பிறந்த நாளை, சந்தானத்தின் அகில இந்திய ரசிகர் மன்றத்தினர் சென்னை நகர மெங்கும் பிரமாண்டமான போஸ்டர் அடித்து ஒட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர். அதில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார் சந்தானம்.