ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் யங் டைகர் எனும் அடைமொழியுடன் வலம் வரும் அதிரடி ஆட்ட நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் பாபி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஜூனியர் என்.டி.ஆரின் சகோதர் கல்யாண் ராம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பிப்ரவரி 11ல் துவங்கும் என கூறப்படுகின்றது. ஜூனியர் என்.டி.ஆர் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஜெய் லவகுசா என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்படத்தின் பூஜையின் போது படதலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. இரு முன்னணி நடிகைகளிடம் இப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம்.