ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் இருந்து வந்தவர்களில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.. சமீபத்தில் விஜய்யுடன் இவர் நடித்த பைரவா படம் வெளியானது.. அடுத்ததாக சூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.. இவர் வெற்றிகரமான நடிகையாக உலாவருவதற்கு இவரது அம்மாவும் முன்னாள் நடிகையுமான மேனகா ஒரு முக்கிய காரணம் என்றால் வெளியில் தெரியாமலேயே மகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவரும் அவரது அப்பா சுரேஷ்குமார் இன்னொரு முக்கிய காரணம்..
மலையாள சினிமாவில் கடந்து முப்பது வருடங்களாக தயாரிப்பாளராக இருந்து வரும் சுரேஷ்குமார் அங்கே முன்னணி நடிகர்களை வைத்து நிறைய படங்களை தயாரித்திருக்கிறாரே தவிர, இதுநாள் வரை எந்தப்படத்திலும் நடித்ததில்லை.. இப்போது திலீப் நடித்துவரும் ராம்லீலா என்கிற படத்தின் மூலம் முதன்முதலாக நடிகராக அவதாரம் எடுத்துள்ளார் சுரேஷ் குமார். இந்தப்படத்தில் அவருக்கு அரசியல்வாதி வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. அருண் கோபி என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.