ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் ஆக்ஷன் கிங் எனும் அடைமொழியுடன் ஹீரோவாக வலம் வந்த அர்ஜூன் தற்போது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகின்றார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். தற்போது மீண்டும் தெலுங்கு திரைப்படமொன்றில் அர்ஜூன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். நானி நடிப்பில் கிருஷ்ணஹாடி வீர பிரேம கதா எனும் படத்தை இயக்கிய இயக்குனர் ஹனு ரகவ்புடி அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நிதின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. நிதினுக்கு ஜோடியாக மேஹா ஆகாஷ் நடிக்கும் இப்படத்தை 14 ரீல்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.