ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 12ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அண்மையில் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப்பார்த்த தணிக்கைக்குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். போர்காட்சிகள், வசனங்கள் மற்றும் பாலகிருஷ்ணாவின் கம்பீரமான தோற்றம், இயக்குனர் க்ரிஷின் கலை நயமிக்க இயக்கம் என பலவற்றையும் குறிப்பிட்டு பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஸ்ரேயா இப்படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி பாலகிருஷ்ணாவின் அம்மாவாக நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த கௌதமிபுத்ர சடர்கனி டிரைலர் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.