ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் பிரகாஷ்ராஜ். அதன்பிறகு வில்லன் நடிகராக வேகமாக வளர்ந்த அவர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் வில்லனாக நடித்து வந்தார். அதோடு, தனது டூயட் மூவீஸ் சார்பில் தோனி, கெளரவம், உன் சமையல் அறையில் உள்பட பல படங்களை தயாரித்தும் வழங்கினார். அதில் தானும் சில படங்களை இயக்கி நடித்தார். தற்போது பிரியதர்ஷன் இயக்கியுள்ள சில சமயங்களில் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். அந்தப்படம் விருது விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ்க்கு புதிய படங்கள் தமிழில் கமிட்டாகவில்லை. தெலுங்கில் மட்டும் 2 படங்களில் அவர் நடித்து வருகிறார். முக்கியமாக, பிரபல வில்லனாக இருந்த அவரை இப்போது யாருமே வில்லனாக பார்க்கவில்லை. குறிப்பாக, தமிழ்ப்படங்களுக்கு வில்லன் தேவை என்றால் தெலுங்கு, இந்தி நடிகர்களை தேடிச்சென்று விடுகிறார்கள். இதனால் பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சுத்தமாக அவுட்டாகி விட்டது. இந்நிலையில், அடுத்தபடியாக வித்தியாசமான குணசித்ர வேடங்கள் பக்கம் திரும்பியுள்ள பிரகாஷ்ராஜ், தன்னை மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க வைத்த டைரக்டர்களை அணுகி, அழுத்தமான குணசித்ர வேடங்களில் நடிக்க வாய்ப்பிருந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம்