ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இதுவரை எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்த ஹிட் படங்களின் டைட்டீல்களில் இப்போதைய சில இளவட்ட ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். அதேபோல் முன்னணி நடிகர்களின் ரசிகராகவும் சில நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கோலிவுட்டில், காதலில் சிம்புவும் தனுசும் -என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. புதுமுக நடிகர்கள் லோகேஷ், ராஜா என்ற இருவர் இந்த படத்தில் சிம்பு, தனுஷ் பெயரில் நடித்துள்ளனர்.
மேலும், சிம்பு-தனுஷின் அதிரடி பஞ்ச் டயலாக்குகளையும் இப்படத்தின் ஹீரோக்கள் அவ்வப்போது ரிப்பீட்டு செய்துள்ளார்களாம். அதோடு, சிம்புவின் கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் என்ற பாடலும், தனுஷின் வாட் எ கருவாட் என்ற பாடலுக்கும் இப்படத்தின் நடித்துள்ள இளவட்ட ஹீரோக்கள் ஆட்டம் போட்டுள்ளார்களாம். இப்படியொரு படம் உருவாகியிருப்பதை சிம்புவின் கவனத்துக்கு கொண்டு சென்றவர்கள், அவரை ஒரு பாடல் பாடி தருமாறும் கேட்டுக்கொள்ள, டபுள் ஓகே சொல்லியிருக்கிறாராம் சிம்பு. இப்படத்தில் அப்புக்குட்டி, கஞ்சாகருப்பு ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.