ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக ஒரு படம் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கும்போது அதன் வசூலை அடியோடு பாதிக்கும் விதமாக அதனை திருட்டுத்தனமாக ஆன்லைனில் பதிவேற்றுவதும், அல்லது டிவிடிக்களாக மாற்றி விற்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. தமிழ்சினிமாவை ஒப்பிடும்போது இது மழையால் சினிமாவில் இதன் பாதிப்பு குறைவுதான் என்றாலும், அவை சம்பந்தப்பட்ட்ட படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணும். மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'புலி முருகன்' படததிற்கு ஒரு மாதம் வரை இந்த பிரச்சனை இல்லையென்றாலும், அந்தப்படமும் ஆன்லைன் பைரசிக்கு தப்பவில்லை..
சைபர் க்ரைம் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அதை பதிவேற்றிய சில இணையதளங்களை முடக்கம் செய்தார்கள்.. இந்நிலையில் 'புலி முருகன்' படத்தின் பைரசிக்கு, கொச்சியை சேர்ந்த சினி பாலிஷ் என்கிற காம்ப்ளெக்ஸ் தியேட்டரே உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட்ட தியேட்டர்மீது நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் இனி அந்த தியேட்டர்களுக்கு எந்தப்படங்களையும் தருவதில்லை என சினிமா எக்ஸிபிடர்ஸ் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.