ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் படத்தின் வாயிலாக மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அனுமபா பரமேஷ்வரன், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட பிரேமம் படத்திலும் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் தன்னகப்படுத்தியுள்ளார். தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்த அனுபமா, அடுத்து டோலிவுட்டின் முன்னணி நாயகனான ராம் சரணுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். துருவா படத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் ராம் சரண் அப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க அனுபமா பரமேஷ்வரனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. கிராமத்து பெண்ணாக அனுபமா இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். நடிகை ராக்ஷி கண்ணாவை இப்படத்தில் நாயகியாக்க திட்டமிட்ட படக்குழு தற்போது, அனுபமாவை நாயகியாக்கியுள்ளனர். பிரேமம் தவிர அ.ஆ எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ள அனுபமா, சதமானம் பவதி எனும் தனது மற்றொரு தெலுங்கு பட ரிலீஸிற்காக காத்திருக்கின்றார்.