பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விவாகரத்து முடிவை எடுத்தபின் தான் அமலாபால் நடிப்பில் விஸ்வரூபம் எடுக்கிறார் என்றே தோன்றுகிறது.. அதற்கேற்ற மாதிரி தமிழில் சில படங்களில் வரிசையாக ஒப்ந்தமாகியுல அமலாபால், மலையாளத்திலும் நடிகர் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் 'அச்சாயன்ஸ்' என்கிற பத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.. 'இந்த வருட ஆரம்பத்தில் சூப்பர்ஹிட்டடித்த 'ஆடுபுலியாட்டம்' படத்தை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்..
இந்தப்படத்தில் அமலாபால் ஜாலியாக ஊரை சுற்றிவர ஆசைப்படும் பைக் ரைடராக நடிக்கிறாராம். தன்னுடன் இன்னும் இரண்டு பெண்களை சேர்த்துக்கொண்டு ஜாலி ட்ரிப் கிளம்பும் அமலாபால் தனது பயண வழியில் ஜெயராம், பிரகாஷ்ராஜ், உன்னி முகுந்தன், அடில் இப்ராஹிம் மற்றும் ஜேக்கப் கிரிகேரி என ஐந்து அச்சாயன்களை சந்திக்கிறாராம். அவர்களுடனான சுவாரஸ்ய சம்பவங்களும் அவற்றை ஒரே கோட்டில் இணைப்பதும் தான் படத்தின் கதையாம்.. அச்சாயன் என்றால் கேரள கிறித்துவர் என்று அர்த்தம். மலையாள சினிமாவில் கிறித்துவ கதாபாத்திரங்களை, குறிப்பாக வயதில் மூத்தவர்களை 'அச்சாயன்' என்று சொல்லித்தான் அழைப்பார்கள்..