ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ஒரு நடிகருக்கு இப்படியும் ரசிகர்கள் இருப்பார்களா என நீங்கள் வியந்தால் அது சிரஞ்சீவியின் ரசிகர்களைப் பார்த்துதான் வியக்க வேண்டும். தமிழில் ரஜினிகாந்தைக் கொண்டாடுவதை விட, தெலுங்கில் சிரஞ்சீவியை பல ஆண்டு காலமாக அதிகமாகவே கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன்பு அரசியல் ஆசை வந்து தனிக் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.யாகத் தேர்வாகி, மத்திய மந்திரியாகவும் அமர்ந்து, அதன் பின் அரசியலே வேண்டாமென ஒதுங்கிவிட்டார் சிரஞ்சீவி. ரஜினி ரசிகர்களுக்கு அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி.
கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். பலரிடம் கதை கேட்டும் பிடிக்காமல் கடைசியில் தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர் 150' என்ற பெயரில் ரீமேக் செய்து முடித்துவிட்டார்.
நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியானது. சிரஞ்சீவி ரசிகர்கள் முதல் கொண்டு திரையுலகினர் வரை அனைவரும் 'பாஸ் இஸ் பேக்' எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். டீசரும் 1 மில்லியனைத் தாண்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்து இன்று வெளியான 'துருவா' படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் 'கைதி நம்பர் 150' டீசருக்கும் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளதால் சிரஞ்சீவி குடும்பத்தினர் டபுள் சந்தோஷத்தில் உள்ளனராம்.