ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
அனைவரையும் கவர்ந்த குறும்படங்களை திரைப்படமாக எடுப்பதையும், வெற்றி பெற்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாக அவற்றின் இரண்டாம் பாகங்களை எடுப்பதையும் மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மலையாள திரையுலகில் இதிலும் ஒரு வித்தியாசமாக ஒரு குறும்படத்தின் தொடர்ச்சியை அடுத்து திரைப்படமாக எடுக்கும் அதிசயத்தை அரங்கேற்ற இருக்கிறார்கள்.. இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' படத்தை இயக்கிய சாஜித் யாஹியா தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்..
அந்தப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜெயசூர்யா தான் இந்தப்படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தை சாஜித் யாஹியா இயக்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே உண்டு.. 'டி கம்பெனி' என்கிற மூன்று குறும்படங்களை உள்ளடக்கி வெளியான ஆந்தாலாஜி வகை படத்தில் இடம்பெற்ற குறும்படம் தான் 'கேங்க்ஸ் ஆப் வடுக்கும்நாதன்'.. இதில் 'வரல் ஜெய்சன்' என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயசூர்யா. தற்போது அதே டைட்டிலில் உருவாகும் இந்தப்படத்தில் அதே கேரக்டராகவே நடிக்கிறார் ஜெயசூர்யா.. குறும்படம் எந்த இடத்தில் முடிந்ததோ, அதன் தொடர்ச்சியாக இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.