ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சுமார் 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தான் இருவர்.. டப்பிங் படங்கள் மூலமாக மட்டுமே தமிழ் ரசிகர்கள் கண்டுகளித்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைப்பதற்காக முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்தார் மணிரத்னம். மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைத்ததற்கு காரணம் இந்தப்படத்தின் கதை தான். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அரசியல் சம்பந்தப்பட்ட இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க தமிழ் முன்னணி நடிகர்கள் பலரும் தயங்கினார்கள். அதனாலேயே எம்.ஜி.ஆர் வேடத்திற்கு மோகன்லாலை தேர்வுசெய்தார் மணிரத்னம். ஜெயலலிதா கேரக்டரில் ஐஸ்வர்யா ராயும், கலைஞர் கேரக்டரில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.. படம் விமர்சன ரீதியாக பேசப்பட்ட அளவுக்கு, உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அளவுக்கு, வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.. ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இருந்தாலும், தமிழில் தான் நடித்த முதல் படம் வெற்றி பெறவில்லையே என்கிற வருத்தம் மோகன்லாலுக்கு நிறையவே இருந்ததாம்.
அந்த சமயத்தில் தான் இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதில் மோகன்லாலின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக அவரை தொலைபேசி மூலமாக அழைத்து பாராட்டினாராம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. படத்தில் இடம்பெற்ற ஒரு வாழும் கதாபாத்திரம், அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா தன்னை பாராட்டியதால், படம் தோல்வியடைந்த வருத்தம் மோகன்லாலிடம் இருந்து நீங்கியதாம்.