கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தெலுங்குத் திரையுலகினரும், ரசிகர்களும் நாளை வெளியாக உள்ள 'துருவா' படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். ராம்சரண், ரகுல் ப்ரீத் சிங் இதற்கு முன் நடித்து வெளிவந்த 'ப்ரூஸ் லீ' படம் தோல்விப் படமாக அமைந்தது. மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ள தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' படத்தை ரீமேக் செய்து நடிக்க முடிவெடுத்தார் ராம்சரண்.
தமிழில் படத்தை இயக்கிய மோகன் ராஜாவே தெலுங்கிலும் படத்தை இயக்குவதாக இருந்தது. பின்னர், அந்தப் படத்தை சுரேந்தர் இயக்க ஆரம்பித்தார். தமிழில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமிக்கு மாற்றாகத் தெலுங்கில் வேறு யாரும் கிடைக்காததால் அவரையே வற்புறுத்தி அதே கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் நடிக்க வைத்தார்கள். இப்படித்தான் 'துருவா' படம் ஆரம்பமானது.
தமிழில் இசையமைத்த ஹிப் ஹாப் தமிழா தெலுங்கிலும் 'துருவா' படத்திற்கு இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகிவிட்டது. படத்தின் டிரைலரும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று புதிய சாதனை படைத்தது. இவையனைத்தும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் படத்திற்கான வியாபாரமும் அமோகமாக நடைபெற்றது.
உலகம் முழுவதிலும் 'துருவா' படத்தைப் பார்க்க ராம்சரணின் ரசிகர்களும், தெலுங்கு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 தியேட்டர்கள் வரை படம் வெளியாக உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 40 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.
'தனி ஒருவன்' படம் ஒரு புத்திசாலித்தனமான திரைக்கதை கொண்ட படமாக தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒரு படம். தமிழில் கிடைத்த மாபெரும் வெற்றியை 'துருவா' தெலுங்கிலும் தாண்டுமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. அப்படி நடந்தால், ராம்சரண் நடித்த படங்களில் மிகப் பெரிய வசூலைப் பெறும் படமாக இந்தப் படம் அமையும்.