கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்தி நடிகர் அக்ஷய்குமாரின் போர்ஷன் முடிந்து விட்டது. ரஜினி இன்னும் 35 நாட்கள் நடிக்க வேண்டியது இருக்கிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் பாடல் காட்சியும் அடங்கும்.
250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட படம் இப்போது 400 கோடியை நெருங்கிவிட்டது என்கிறார்கள். படப்பிடிப்புகள் திட்டமிட்டபடிதான் நடந்து வருகிறது. படம் 3டி தொழிலுநுட்பத்தில் படமாக்கப்படுவதால் அதற்கென உரிய லைட்டிங்குள், செட் அமைப்புகள் அமைத்த வகையில் எதிர்பாராத செலவுகள் ஆகியுள்ளதாம். படபிடிப்புகள் முடியும்போது படத்தின் பட்ஜெட் 350 கோடி ஆகியிருக்கும். அதன் பிறகு கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் பணிகளுக்காக 50 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறார்களாம். எல்லாம் முடிந்து படத்தின் பர்ஸ்ட் காப்பி கைக்கு வரும்போது பட்ஜெட் 400 கோடி ஆகியிருக்குமாம். அதன்பிறகு படத்தின் புரமோசனுக்கு ஆகிற செலவுகள் தனி.
பாகுபாலி இரண்டாம் பாகம் 200 கோடியில் திட்டமிட்டு தற்போது அதன் பட்ஜெட் 250 கோடி ஆகியுள்ளது என்கிறார்கள். முதலில் பாகுபலி பிரமாண்ட படமாக பார்க்கப்பட்டது. தற்போது 2.ஓ முன்னணிக்கு வந்திருக்கிறது. பாகுபலியின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. 400 கோடி வரை விற்பனையாகியிருப்பதாக சொல்கிறார்கள். 2.ஓ படம் இன்னும் விற்பனையை ஆரம்பிக்கவில்லை. உலக அளவில் படத்தை கொண்டு சென்று 700 கோடி வரை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.