கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
த்ரிஷா, பீல்டுக்கு வந்து 16 வருடங்கள் ஆகின்றன.. இத்தனை வருடங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துவரும் த்ரிஷா ஆரம்பத்தில் தமிழுக்கும் தெலுங்கிற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்துவந்தார். இந்தியிலும் கன்னடத்திலும் சும்மா பேருக்கு ஒரு படம் மட்டும் நடித்ததோடு சரி.. ஆனால் நடிப்பிற்கு தீனிபோடும் மலையாளப்படங்களில் அவர் இதுவரை நடிக்கவே இல்லை. இத்தனைக்கும் அவரை தமிழ்சினிமாவில் ஆரம்பகாலத்தில் அறிமுகப்படுத்தியதே ப்ரியதர்ஷன் என்கிற மலையாள இயக்குனர்தான்.
உதய் ஆனந்தன் என்பவர் இயக்கி இந்த வருடம் வெளியான 'ஒயிட்' என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க கடந்த வருடம் த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. அதனால் அவருக்கு பதிலாக வடக்கத்தி நடிகை ஹ்யூமா குரோஷியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் இப்போது மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் த்ரிஷா.. இந்த தகவலை அவரே அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துகொண்டும் உள்ளார்.. இந்தப்படத்தை இயக்கம் ஷ்யாம் பிரசாத் ஏற்கனவே, நிவின்பாலி, பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த 'இவிடே' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.