கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 திரைப்படம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி டோலிவுட்டிற்கு ரீஎன்ட்ரி ஆகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வரும் கைதி நம்பர் 150 படத்தின் பாடல்களை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜயவாடாவில் அமைந்துள்ள இந்திரா முனிஸிபல் ஸ்டேடியத்தில் கைதி நம்பர் 150 பட பாடல்களை வெளியிட படக்குழு ஏற்பாடு செய்து வருகின்றது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கும் கைதி நம்பர் 150 பொங்கல் அன்று திரைக்கு வர தயாராகி வருகின்றது.