அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |
விஜய் நடித்த கத்தி படத்தை அடுத்து அகிரா இந்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகுல்ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். துப்பாக்கி படத்தை போன்று ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு முதலில் வாஸ்கோடகாமா என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், பின்னர் அந்த செய்தியை மறுத்தார் முருகதாஸ். அதையடுத்து டைட்டீலை பிறகு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பில் இறங்கினார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு ஏஜென்ட் சிவா என்ற தலைப்பை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி வெளியானதை அடுத்து, அதற்கு மறுப்பு சொல்லாத ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் தலைப்பு இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இருப்பினும், இந்த தலைப்பைதான் அவர் உறுதி செய்து வைத்திருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.