ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான இருக்கும் 'ஒப்பம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மோகன்லால். த்ரிஷ்யம் படத்தை தொடர்ந்து மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றி என சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாமல் தடுமாறி நின்ற வேளையில்தான் 'ஒப்பம்' அவரை தலைநிமிர செய்தது..
இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியை சேர்த்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் ரைட்ஸுக்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.. இந்நிலையில் இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்யாமல் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.. வழக்கமாக மோகன்லாலின் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும்போது வேறு யாரோ தான் அவருக்கு டப்பிங் பேசியிருப்பார்கள்.. ஆனால் இந்தப்படம் தனது நண்பரும் ஆஸ்தான இயக்குனருமான பிரியதர்ஷனின் படம் என்பதால், தானே தமிழிலும் டப்பிங் பேசித்தர ஒப்புக்கொண்டுவிட்டாராம் மோகன்லால்.. .