ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹரை தெரியும் தானே.. நவ-20ல் மும்பையில் நடைபெற இருக்கும் '2.O' படத்தின் பர்ஸ்ட் லுக் விழாவைக்கூட இவர்தான் தொகுத்து வழங்கவுள்ளார். சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் என்பவர் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்காக கரண் ஜோஹரை பேட்டி எடுத்தார்.. அப்போது பிரந்திய மொழிப்படங்களில் அவரை கவர்ந்த படம் எது என கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தை பதிலாக சொன்னார் கரண் ஜோஹர். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார்.
அப்போது அந்தப்படத்தின் இயக்குனரான அல்போன்ஸ் புத்ரனின் மேக்கிங் திறமையை பற்றி சிலாகித்து பேசிய கரண் ஜோஹர், அல்போன்ஸின் முதல் படமான 'நேரம்' படத்தையும் தான் ரசித்து பார்த்ததாக கூறியுள்ளார். தற்போது 'பிரேமம்' படத்தின் இந்தி ரீமேக்கிற்காக பாலிவுட்டில் முகாமிட்டு அல்போன்ஸ் புத்ரன் காய் நகர்த்தி வருவதற்கும், கரண் ஜோஹரின் பாராட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பது இனிமேல்தான் தெரியவரும்.