Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பவன் கல்யாண் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

17 நவ, 2016 - 14:24 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-to-pair-with-Pawan-Kalyan

தமிழ்த் திரையுலகத்தில் 'இது என்ன மாயம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். 80களில் தமிழ், மற்றும் மலையாளப் படங்களில் நாயகியாக நடித்த மேனகாவின் மகள். 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையானார். சமீபத்தில் வெளிவந்த 'ரெமோ' படத்தின் வெற்றி அவரை தமிழின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உயர்த்தியது. தற்போது விஜய்யுடன் கீர்த்தி நடித்து வரும் 'பைரவா' படம் வெளிவந்தால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயரும். அடுத்து சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் அவரை வேறு ஒரு கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். ஆக, அடுத்த ஆண்டில் கீர்த்தி சுரேஷ் நம்பர் 1 ஹீரோயினாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


தெலுங்கிலும் அவர் அறிமுகமான 'நேனு ஷைலஜா' என்ற படம் வெற்றிப் படமாக அமைந்தது. ஆனாலும், அதன்பின் அவர் அதிகமான தெலுங்குப் படங்களில் நடிக்கவில்லை. 'நேனு லோகல்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கின் மிகப் பெரிய ஸ்டாரான பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். “என்னுடைய அடுத்த தெலுங்குப் படம் பற்றி அறிவிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,” என அவரே தெரிவித்துள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இந்தப் படத்தை இயக்க உள்ளார். பவன் கல்யாண் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதைத் தொடர்ந்து அங்கும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து உயர வாய்ப்புள்ளது.


அதோடு இயக்குனர் கொரடலா, மகேஷ்பாபு இணைய உள்ள படத்திலும், லிங்குசாமி, அல்லு அர்ஜுன் இணைய உள்ள படத்திலும் கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in