ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவர்ச்சி கதாநாயகியாக நீண்ட காலமாக வலம் வந்து கொண்டிருந்த தமன்னா, வீரம் படத்திற்கு பிறகு பர்பாமென்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பாகுபலி படத்தில் புரட்சி பெண்ணாக நடித்த அவர், பிரபு தேவா நாயகனாக நடித்த தேவி படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதையடுத்து விஷாலுடன் அவர் நடித்துள்ள கத்திச்சண்டை ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில், முதன்முறையாக சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.
மேலும், சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்றாலே நடிகைகள் ஓட்டம் பிடித்து வந்த நிலையில், இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக சிவாஜி கேர்ள் ஸ்ரேயா நடிக்க, இப்போது இன்னொரு சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். கதைப்படி அஸ்வின் தாத்தாவாக சிம்பு நடிக்கும் வேடத்துக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா சிம்புவைப்போலவே தானும் 60 வயது பாட்டியாக நடிக்கிறாராம். ஆனால் இது அந்த கதாபாத்திரம் முழுக்க இல்லையாம். சில காட்சிகளில் மட்டும்தான் அப்படி நடித்துள்ளார்களாம். மற்றபடி சிம்பு-தமன்னா ஜோடி இளமையான கெட்டப்பில் கிளுகிளுப்பாகவே நடித்துள்ளார்களாம்