ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், வெளிவந்துள்ள புலிமுருகன் திரைப்படம் கேரள ரசிகர்களின் வரவேற்புடன் வசூலையும் வாரி குவித்து வருகின்றது. மலையாளத்தில் வெற்றி கண்ட இப்படத்தை தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி புலிமுருகன் தெலுங்கு ரீமேக்கில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிப்பார் என கூறப்படுகின்றது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் பிரபாஸ், அதன் பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கும் ஆக்ஷன் படத்தில் போலீஸாக நடிக்கவுள்ளார். டிசம்பரில் பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்புகளை முடிக்கும் பிரபாஸ் அதன் பின்னர் சுஜீத் படத்தில் நடிக்கின்றார். இதனிடையே புலிமுருகன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பிரபாஸிடம் பேச்சு வார்த்தை துவங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல் புலிமுருகன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகனாக நடிக்க சல்மான் கானிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது.