ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் வேதாளம். கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் நடித்திருந்தார்கள். அனிருத் இசை அமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
இதில் பவன் கல்யாண் அஜித் ரோலில் நடிக்கிறார். வேதாளம் படத்தை தமிழில் தயாரித்த ஏ.எம்.ரத்னம், தெலுங்கிலும் தயாரிக்கிறார். விஜய் நடித்த ஜில்லா படத்தை இயக்கிய ஆர்.டி.நேசன் தெலுங்கு வேதாளத்தை இயக்குகிறார். இதன் துவக்க விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் பவன் கல்யாண், ஆர்.டி.நேசன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.