ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படத்தை அடுத்து ஒரு மிகப்பெரிய இடைவெளி விட்டுள்ளார் துல்கர் சல்மான்.. அந்த இடைவெளியை சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் தற்போது தான் நடித்துவரும் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தை சரிசெய்வதற்காக வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்.. இந்தப்படத்தை முடித்ததும் அமல் நீரத் டைரக்சனில் நடிக்க இருக்கிறார்..
அதன்பின் 2017ல் முதல் படமாக ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி லால் ஜோஸ் டைரக்சனில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.. இந்தப்படத்திற்கு 'ஒரு பயங்கர காமுகன்' என பெயர் வைத்துள்ளார் இயக்குனர் லால் ஜோஸ். முழுக்க முழுக்க ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக உருவாக இருக்கிறது இந்தப்படம்.. ஏற்கனவே 'விக்ரமாதித்யன்' படம் மூலமாக நூறுநாள் வெற்றியை ருசித்த இந்த கூட்டணி 'ஒரு பயங்கர காமுகன்' படத்திலும் அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.