ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக தற்போது ‛2.O' படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஷங்கர் முன்பை விட இன்னும் பிரமாண்டமாய் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 75 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மிகப் பிரம்மாண்டமாக சென்னை நகரின் சில முக்கிய வீதிகளையும், கட்டிடங்களையும் உள்ளடக்கிய செட்டில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் சில வார ஓய்விற்குப் பிறகு 2.0 படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டார். அவருக்காக படப்பிடிப்பு அரங்கிலேயே பிரத்தியேகமாக தங்கும் அறைகள், ஓய்வெடுக்கும் அறைகள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ‛2.O' படத்தின் அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற நவம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து ஜனவரியில் படத்தின் டீசரையும், படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.