ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போதைய சூழலில் ஒரு படம் 1 வாரம் ஓடுவதே பெரிய சாதனையாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படம் தற்போது வெற்றிகரமாக 50 வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் விஜய்சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த படம் 'இடம் பொருள் ஏவல்'. லிங்குசாமி தயாரித்த இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சனை உட்பட பல காரணங்களால் ரிலீஸாகாமல் முடங்கிக்கிடக்கிறது.
இந்நிலையில், மீண்டும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி டாக்டராக நடித்த படம் தர்மதுரை. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியான 'தர்மதுரை' திரைப்படம் ஆர்ப்பாட்டமில்லாமல் ரிலீஸாகி, மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதோடு, தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபம் தந்தது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில் இன்னொரு படமான 'ஆண்டவன் கட்டளை'யும் ரிலீஸானது. இந்தப் படமும் நல்ல வரவேற்பு பெற்றது. 'தர்மதுரை'யும் ஆண்டவன் கட்டளை படமும் இன்னமும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே இந்தவாரம் விஜய்சேதுபதியின் இன்னொரு படமான 'றெக்க'யும் ரிலீஸாகி விஜய்சேதுபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.