ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கும் பிருத்விராஜுக்கு இப்போது அடுத்ததாக இயக்குனர் என்கிற கூடுதல் பொறுப்பும் சேர்ந்துவிட்டது.. ஒருபக்கம் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் மோகன்லாலை வைத்து தான் இயக்கவுள்ள 'லூசிபர்' படத்திற்கான லொக்கேசன் வேட்டை மற்றும் கதை விவாதம் என பிஸியாக சுற்றி வந்த பிருத்விராஜுக்கு ஒரு நாள், ஒரே ஒருநாள் ரிலாக்ஸாக இருக்கலாம் என தோன்றியது..
அதற்காக குடும்பத்துடன் டூர் கிளம்பிவிட்டார் என நினைக்கவேண்டாம்.. தான் தயாரிக்கும் 'தி கிரேட் பாதர்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு சென்று இறங்கினார்.. காரணம் படத்தில் நடிப்பது அவருக்கு ரொம்பவும் பிரியப்பட்ட அண்ணனான மெகாஸ்டார் மம்முட்டி மற்றும் அவரது நண்பரான ஆர்யா இருவரும் தானே.. இவர்கள் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என பிருத்விராஜூக்கு தெரியாதா என்ன..? அந்தவகையில் 'தி கிரேட் பாதர்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் கிடைத்த இடைவெளிகளில் மம்முட்டி, ஆர்யா மற்றும் படக்குழுவினருடன் செம அரட்டை அடித்து மகிழ்ந்துள்ளார் பிருத்விராஜ்.