ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களின் பாடல்கள், டீசர் போன்றவை மர்மமான முறையில் இணையதளங்கள், வாட்ஸ்அப்புகளில் கசிவது தொடர்ந்து வருகிறது. ரஜினியின் கபாலி படத்தின் பாடல்கள்கூட அவர்கள் வெளியிடு வதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி விட்டது. அதனால், சத்தமில்லாமல் பின்னர் ஆடியோவை வெளியிட்டனர்.
இந்த நிலையில், விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் பர்ஸ்ட் லுக் தவிர மற்ற விசயங்கள் எதையும் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்து வருகின்றனர். ஆனால், பைரவா படப்பிடிப்பு நடைபெற்று வரும் சில பகுதிகளுக்கு யூனிட்டில் இருக்கும் தெரிந்தவர்கள் மூலம் விசிட் அடிக்கும் சில விஜய் ரசிகர்கள், அங்கே விஜய் நடிப்பது, மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது போன்றவற்றை செல்போனில் படமாக்கி அதை வாட்ஸ்அப்பில் வெளியிட்டு விட்டார்களாம். அதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த விஜய், இனிமேல் பைரவா படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளில் யூனிட் நபர்கள் தவிர வேறு யாரும் நுழைய தடை விதிக்க சொல்லியிருக்கிறாராம். அதோடு யூனிட்டைச்சேர்ந்தவர்கள் அங்கே செல்போனில் வீடியோ எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.