சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
முன்னாள் இந்திய பிரதமர் தேவகௌடாவின் பேரனும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமார் கன்னட திரை உலகில் நாயகனாக அறிமுகமாகின்றார். நிகில் நடிக்கும் ஜாகுவார் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 6ல் திரைக்கு வரவுள்ளது. ராம் சரணும் நிகிலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஜாகுவார் படத்தின் டீசரை அப்படத்தின் படப்பிடிப்புதளத்திற்கு சென்று ராம் சரண் பார்த்துள்ளார். ராம் சரன் ஜாகுவார் பட டீசரை பார்க்கும் வீடியோ தற்போது இணையத்தில் பரவியுள்ளது. கன்னடத்தில் பெரும் விளம்பரத்துடன் வெளிவரும் ஜாகுவார் படத்தை தெலுங்கில் ராம் சரணை வைத்து விளம்பரம் செய்கின்றனர். தெலுங்கு வில்லன் நடிகர் ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாகுபலி நாயகி தமன்னா இப்படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.