ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியும் நடிகர் நானியும், டோலிவுட்டில் நெருங்கிய நண்பர்கள் என்பது அறிந்ததே. ராஜமௌலி இயக்கிய “நான் ஈ” படத்தில் நாயகனாக நானி நடித்திருந்தார். தற்போது நானி நடித்துள்ள மஜ்னு படத்தில் ராஜமௌலி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். பாகுபலி படத்தில் ரானா பயன்படுத்திய ரதத்தை மஜ்னு படத்தில் நானி உபயோகப்படுத்தியுள்ளார் என்பது டீசரில் தெரிந்தது. மேலும் பாகுபலி படத்தின் இயக்குனரையும் நானி பயன்படுத்திக் கொண்டுள்ளார். மஜ்னு படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளில் ராஜமௌலி தோன்றுவார் என நானி கூறியுள்ளார். மஜ்னு படத்தின் புரமோஷனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 23ல் திரைக்கு வரவிருக்கும் மஜ்னு படத்தை இயக்குனர் விரின்சி வர்மா இயக்கியுள்ளார். நானிக்கு ஜோடியாக மலையாள நடிகை அனு இமானுவேல் நடித்துள்ள இப்படத்தில் ப்ரியா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.