Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சாமி 2' சம்பளத்தை உயர்த்திய விக்ரம் ?

17 செப், 2016 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Vikram-raised-salary-for-Saamy-2

விக்ரம் நடித்து கடந்த வாரம் வெளிவந்துள்ள 'இருமுகன்' படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றி படத்தை வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமான ஆரா சினிமாசின் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். படத்தை வெளியிட்டவரே அதன் வசூலைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அந்தப் படத்தின் வசூலைப் பற்றி மற்றவர்கள் ஏற்றியோ, இறக்கியோ சொல்ல முடியாது. வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றி என்பது படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் மறுபக்கம் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதற்குக் காரணம் இருக்கிறது.


விக்ரம் - ஹரி நீ.....ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ள 'சாமி 2' படத்தை 'இருமுகன்' படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ்தான் தயாரிக்க உள்ளார். 'இருமுகன்' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் அதிக மகிழ்ச்சியில் உள்ளது விக்ரம் தான். ஏனென்றால் இதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த 'பத்து எண்றதுக்குள்ள' படம் பத்து காட்சிகள் கூட ஹவுஸ்ஃபுல்லாக போகாமல் படுதோல்வி அடைந்தது. அவருடைய மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அவருக்கு அடுத்த வெற்றி என்பது கட்டாயாக தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. இதை 'இருமுகன்' இனிமையாகக் கொடுத்துவிட்டது.


எனவே, 'இருமுகன்' வெற்றியைக் காரணமாக வைத்து 'சாமி 2' படத்திற்காக சம்பளத்தை சில பல கோடிகள் அதிகப்படுத்திவிட்டாராம். விஜய் நடித்த 'புலி' பட தோல்விக்கே பயப்படாத ஷிபு தமீன்ஸ் விக்ரமை நம்பி 'இருமுகன்' படத்திற்கு 40 கோடி வரை செலவு செய்தார் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது 2003ன் மாபெரும் வெற்றிப் படமான 'சாமி' கூட்டணி 13 வருடங்கள் கழித்து 'சாமி 2' படத்தில் இணையும் போது விக்ரம் சம்பளத்தைப் பற்றி யோசிப்பாரா என்ன ?. விக்ரம் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க அவரும் சரி என்றே சொல்லிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in