Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கௌதம் மேனனுக்கு வந்த அடுத்த சிக்கல் ?

16 செப், 2016 - 11:36 IST
எழுத்தின் அளவு:
gautham-menon--again-in-a-problem

'ஸ்டைலிஷ் இயக்குனர்' எனப் பெயரெடுத்த கௌதம் மேனன் சூர்யா, சிம்பு, சமந்தா, நாக சைதன்யா உட்பட சில ஹீரோ, ஹீரோயின்களுக்குத் திருப்புமுனைப் படங்களைக் கொடுத்தவர். இன்றைக்கு திரைப்படம் பார்க்க அதிகமாக வரும் இளம் ரசிகர்களுக்கேற்ப படங்களைக் கொடுத்து வருபவர் கௌதம் மேனன். எந்த நேரத்தில் 'அச்சம் என்பது மடமையடா' எனப் பெயர் வைத்து படத்தை ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து அவருக்கு அனைத்து திசைகளிலிருந்தும் படத்தை வெளியிட முடியாமல் அச்சத்தைக் கொடுத்து வருகிறார்கள்.


திருப்புமுனைகளைக் கொடுத்தவருக்கே தீராத வலியைக் கொடுத்த சூர்யாவுக்குப் பிறகு அதே போன்றதொரு வலியைக் கொடுத்தார் சிம்பு. அவர் மட்டும் சரியான நேரத்தில் வந்து கடைசி கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருந்தால் இரண்டு மாதங்களுக்கு முன்பே 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளிவந்திருக்கும். எப்படியோ சிம்புவை சரிக்கட்டி சில நாட்களுக்கு முன்பு படத்தை முடித்தனர்.


ஒரே சமயத்தில் இந்தப் படத்தை தெலுங்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க 'சாகசம் சுவாசகா சாகிப்போ' என்ற பெயரில் எடுத்து முடித்துவிட்டார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் வெளியிட்டால்தான் இந்தப் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும். அதனால்தான் தெலுங்கில் படம் முடிந்த பிறகும் வெளியிடாமல் தமிழ்ப் படம் முடிவதற்காகக் காத்திருந்தார். இப்போது இரண்டு படங்களும் முடிந்த நிலையில் செப்டம்பர் மாதக் கடைசி வாரத்தில் இரண்டு மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்.


ஆனால், இதன் தெலுங்குப் படத்தை இந்த மாதக் கடைசியில் வெளியிடக் கூடாது என நாக சைதன்யா நடித்துள்ள 'பிரேமம்' தெலுங்குப் படத்தைத் தயாரித்துள்ளவர்கள் பிரச்சனை செய்கிறார்களாம். 'பிரேமம்' படத்தை அக்டோபர் 7ம் தேதி வெளியிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதனால், 'சாகசம் சுவாசகா சாகிப்போ' செப்டம்பர் இறுதியில் வெளிவந்தால் அது 'பிரேமம்' படத்தை பாதிக்கும் என்று கருதுகிறார்கள்.


இருந்தாலும் தன் படம்தான் முதலில் வெளிவர வேண்டும் என கௌதம் மேனன் விடாப்படியாகக் கூற, அதற்கு 'பிரேமம்' தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நாக சைதன்யா யார் பக்கம் சாய்வது என குழம்பத்தில் உள்ளார். இருந்தாலும் தனக்கு திருப்புமுனை தந்த கௌதம் பக்கம்தான் அவர் இருப்பார் என்கிறார்கள். இந்த சண்டை முடிந்தால்தான் 'அச்சம் என்பது மடமையடா' வெளிவரும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in