விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் படத்தைக் கொடுத்த இயக்குனர் லிங்குசாமி அதன்பின்னர் தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன், ‛சரைய்னோடு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால் லிங்குசாமி படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படத்தை இயக்க லிங்குசாமி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஜனதா கேரேஜ் படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் தனது அடுத்த படத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை என கூறினார். மேலும் தற்போது பல இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகின்றாராம் ஜூனியர் என்.டி.ஆர். இயக்குனர் லிங்குசாமியும் ஒரு ஆக்ஷன் கதையை தேர்வு செய்து ஜூனியர் என்.டி.ஆரிடம் கூறியுள்ளதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.