ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த ‛ஸ்பெஷல் 26' திரைப்படம், பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கவுள்ளார். பவன் கல்யாண் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் கபார் சிங் படத்தை இயக்கிய ஹரீஷ் சங்கர் தற்போது அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் டீஜே எனும் படத்தை இயக்குகின்றார். இப்படத்திற்கு பின்னர் “ஸ்பெஷல் 26” படத்தின் தெலுங்கு ரீமேக்கை ஹரீஷ் சங்கர் இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே ரவி தேஜா நடிப்பில் “ஸ்பெஷல் 26” படத்தை தெலுங்கில் ஹரீஷ் சங்கர் இயக்குவதாக கூறப்பட்டது ஆனால் ரவிதேஜா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். தற்போது அல்லு அர்ஜூன் படத்தை இயக்கும் ஹரீஷ் சங்கர் அப்படத்திற்கு பின்னர் அடுத்த வருடம் “ஸ்பெஷல் 26” படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குவார் என தெரிகிறது.