ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் நிவின்பாலி, இன்னொரு பக்கம் மலையாளத்தில் தனது நண்பர் சித்தார்த் சிவா இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.. இந்த இரண்டு படங்களும் முடிவடையும் நிலையில் இருப்பதால், அடுத்ததாக அல்தாப் என்பவர் இயக்கத்தில் ஏற்கனவே அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கப்பட்டு விட்டன. பிரேமம் படத்தில் நிவின்பாலியுடன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர் தான் இந்த அல்தாப்.
அல்போன்ஸ் புத்திரனிடம் உதவி இயக்குனராக கொஞ்சமே கொஞ்ச நாள் மட்டும் வேலைபார்த்த இவர், நிவின்பாலியின் நெருங்கிய நண்பரும் கூட. இவர் சொன்ன ஒரு கதை நிவின்பாலிக்கு பிடித்துப்போக, அவரை இயக்குனராக மாற்றி அந்தப்படத்தை தானே தயாரித்து, ஹீரோவாக நடிக்கவும் ஒப்புக்கொண்டார். நீண்ட நாட்களாக இந்தப்படத்தின் கதாநாயகியை தேடிக்கொண்டு இருந்தவர்கள், ஒருவழியாக ஆஹானா கிருஷ்ணா என்பவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்..
காவலன், தெய்வத்திருமகள், முகமூடி, மனிதன் ஆகிய படங்களில் நடித்த மலையாள குணச்சித்திர நடிகரான கிருஷ்ணகுமாரின் மகள் தான் இவர்.. பஹத் பாசிலின் தம்பி பர்ஹான் பாசில் முதன்முதலாக அறிமுகமான 'நான் ஸ்டீவ் லோபஸ்' என்கிற படத்தில் தான் ஆஹானா கிருஷ்ணாவும் அறிமுகமானார். அதன்பின் ஷாஜி கைலாஷின் மகன் ஜெகன் இயக்கிய குறும்படத்தில் நடித்தவருக்கு இப்போது நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் தேடிவந்துள்ளது.