ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் சோகைல் கான். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என் பன்முக திறமை கொண்ட இவர், தற்போது ‛பிரீக்கி அலி' என்ற படத்தை இயக்கியுள்ளார். நேற்று இப்படம் வெளியாகியிருக்கிறது. சமீபகாலமாக சோகைல் கானும், நடிகை ஹூமா குரேஷியும் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வந்தது. இதுப்பற்றி சமீபத்தில் இப்பட புரொமோஷனில் பிஸியாக இருந்த சோகல் கானிடம் கேட்டபோது, மிகவும் வருத்தத்துடன் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது... ‛‛எங்கிருந்து இதுபோன்ற செய்திகள், கிசுகிசுக்கள் வருகிறது என்றே தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளால் மிகவும் மனவருத்தம் அடைந்தேன். ஹூமாவுடன் நெருக்கமாக இருப்பதாக வெளியான செய்தி துளியும் உண்மை இல்லை. செய்தி வெளியிட்டவர்கள் அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா.?, அப்படி ஆதாரத்தை தந்தால் நான் என் வாயை மூடிக்கொள்கிறேன். ஆதாரமின்றி எந்த செய்தியும் வெளியிடாதீர்கள். எந்தவொரு ஆதாரமும் இன்றி நடிகர்கள் பற்றி தொடர்ந்து இதுபோன்ற கிசுகிசுக்கள் எழுதப்பட்டு வருகிறது. இதை நான் தவறாக எடுக்கவில்லை, ஆனால் என் குடும்பத்தில் உள்ள மனைவி, குழந்தைகளின் மனநிலை எப்படியிருக்கும் என்று எண்ணி பாருங்கள். எங்களுடைய பிள்ளைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள், அங்கு அவர்கள் நண்பர்களுடன் பழகுவார்கள், பேசுவார்கள், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுபோன்ற செய்திகள் எல்லாம் அவர்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். எனவே உண்மை என்னவென்று தெரிந்து செய்தியை எழுதுங்கள் என்று மிகவும் வருத்தத்துடன் தனது விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.