ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய முன்னணி இயக்குனர்கள் அனைவருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்பது கனவாகவே இருக்கும். மலையாள இயக்குனர் பிரியதர்ஷனுக்கும் அப்படி ஒரு கனவு நீண்ட நாட்கள் கனவாகவே இருந்து வருகிறது.. இத்தனைக்கும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து 27 படங்களை இயக்கியவர் தான். இதோ நாளை தங்களது கூட்டணியில் உருவாகியுள்ள 28-வது படமான 'ஒப்பம்' படத்தை ரிலீஸ் செய்கிறார்.
இந்தசமயத்தில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் இருந்து பிரியதர்ஷனுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு வேண்டுகோள் பறந்தது. அதாவது மோகன்லால் நடித்து நாளை வெளியாகும் 'ஒப்பம்' படத்தை பார்க்க விரும்புவதாக ரஜினி கூற, ரொம்பவே உற்சாகமாகிவிட்டாராம் பிரியதர்ஷன்.. இன்று இரவு ரஜினியின் வீட்டிலிலேயே 'ஒப்பம்' படத்தை அவருக்கு திரையிட்டு காட்ட ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்தும் விட்டாராம் பிரியதர்ஷன். ஆக நாளை வெளியாகும் மோகன்லால் படத்தை இன்றே முதல் ஆளாக பார்க்கிறார் ரஜினி.
ஒரு சூப்பர்ஸ்டார் படத்தை இன்னொரு சூப்பர்ஸ்டார் முதல் ஆளாக பார்க்கிறார்.. அதுதான் ஹைலைட்.