Advertisement

சிறப்புச்செய்திகள்

வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

குறும்படத்தை காட்டி படம் இயக்க வாய்ப்பு கேட்டவரை நடிகராக்கிய மம்முட்டி..!

08 செப், 2016 - 13:27 IST
எழுத்தின் அளவு:
jude-antony-with-mammootty-in-a-car-ride

தனது முதல் படமான 'ஓம் சாந்தி ஒசானா'வில் நிவின்பாலி-நஸ்ரியா ஜோடியை மீண்டும் இணைத்து, மலையாள சினிமாவில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர் மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.. அதற்குமுன் வினீத் சீனிவாசனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து அவரது முதல் இரண்டு படங்களில் பணியாற்றியவர்.. சினிமாவுக்குள் இவர் நுழைவதற்கு மெகாஸ்டார் மம்முட்டிதான் இன்ஸ்பிரேஷன். அதானால் தான் தனது முதல் படம் இயக்குவதற்கு முன்பே மம்முட்டியை பற்றி 'மம்முக்கா பயோகிராபி' என்கிற குறும்படத்தை எடுத்தார்.


அதுவரை மம்முட்டியை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிடவேண்டும் என்கிற ஆவலில் இருந்த ஜூட் ஆண்டனிக்கு, இப்போது மம்முட்டியை பற்றி தான் எடுத்த குறும்படத்தையும் அவரிடம் காட்டவேண்டும் என்கிற ஆசையும் உடன் சேர்ந்துகொண்டது.. வினீத் சீனிவாசனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தபோது விஷயத்தை அவரிடம் சொல்ல, அவர் அந்த சமயத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்த மம்முட்டியை சந்திக்க அழைத்து சென்றாராம். ஜூட் ஆண்டனியை பார்த்த மம்முட்டி “என்னிடம் ஏதும் கதை சொல்கிறேன்.. கால்ஷீட் கேட்கிறேன் என வரவில்லையே” என கேட்டாராம்..


அதற்கு ஜூட் ஆண்டனி, இல்லை எனவும், தான் அவரைப்பற்றி இயக்கிய குறும்பத்தை அவர் பார்க்கவேண்டும் எனவும் மட்டும் சொல்லவே அந்த பதிலால் அவரை மம்முட்டிக்கு பிடித்துப்போனது. அதன்பின் ஒருமாதம் கழித்து அந்தப்படப்பிடிப்பு தளத்துக்கு மீண்டும் மம்முட்டியை பார்க்க தனியாக சென்றார் ஜூட் ஆண்டனி.. அப்போது மம்முட்டியை சுற்றி ஒரு கும்பலே நின்றிருக்க, தொந்தரவு செய்யவேண்டாம் என திரும்பி நடக்க ஆரம்பித்தார்.. ஆனால் பின்னாலிருந்து 'எடோ நீ இங்கோட்டு வரான்' என மம்முட்டி அவரை அழைக்க, அத்தனை பேர் முன்னிலையில் தன்னை மம்முட்டி ஞாபகம் வைத்து அழைத்ததை நினைத்து சிலிர்த்துப்போனாராம் ஜூட் ஆண்டனி..


அதன்பின் அவர் தன்னை பற்றி எடுத்த குறும்படத்தை மம்முட்டி பாராட்ட, உங்களை வைத்து பெரிய படமே எடுக்கவேண்டும் என சமயம் பார்த்து ஒரு 'பிட்'டை போட்டாராம் மம்முட்டி.. இது நடந்து சில வருடங்களில் ஜூட் ஆண்டனி தனது முதல் படமான 'ஓம் சாந்தி ஓசானா'வை இயக்கி, அடுத்ததாக இதோ 'ஒரு முத்தச்சி கதா' என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். இந்தசமயத்தில்தான், மம்முட்டி தான் நடித்துவரும் 'தோப்பில் ஜோப்பன்' என்கிற படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் ஒன்று இருக்க தன்னிடம் படம் இயக்க வாய்ப்பு கேட்ட ஜூட் ஆண்டனியை வரவழைத்து அந்த கேரக்டரில் நடிக்கவைத்துவிட்டராம். இது எப்படி இருக்கு..?.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in