ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'போகன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி அந்தப் படத்தை முடித்த கையோடு ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன், மிருதன் பட இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் உட்பட பல இயக்குநர்களுக்கு கால்ஷீட் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் ஜெயம்ரவி.
ஆனாலும் தன்னுடைய அடுத்தப் படமாக இருக்க வேண்டும் என்று விரும்பி கால்ஷீட்டில் முன்னுரிமை கொடுத்தது ஏ.எல்.விஜய்க்குத்தான். தவிர, அமலாபால் விவாகரத்து காரணமாக அமைதியில்லாமல் இருக்கும் விஜய்க்கு, உடனே கால்ஷீட் கொடுத்தால் பட பணிகளில் பிஸியாகி சொந்தப் பிரச்சனையை மறந்துவிடுவார் என்ற நல் எண்ணத்திலேயே முன்னுரிமை கொடுத்தாராம் ஜெயம்ரவி.
இப்படத்தில் ஜெயம் ரவி ஆதிவாசியாக நடிக்கவிருக்கிறார். ரொமான்டிக் ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அந்தமான், தாய்லாந்து உட்பட மலைக்காடுகள் நிறைந்த நாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். விஜய் படங்களுக்கு வழக்கமாக நீரவ்ஷாதான் ஒளிப்பதிவு செய்வார். தற்போது அவர் 2.0 படத்தில் பிஸியாக இருப்பதால், இந்தப் படத்துக்கு முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான திருவை ஒளிப்பதிவு செய்ய அழைத்திருக்கிறார். அது மட்டுமல்ல, இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதல்முறையாக இயக்குநர் விஜய்யுடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் யார் என்ற சபென்ஸ் நிலவியது. அதற்கு தற்போது விடை தெரிய வந்திருக்கிறது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் திலீப்குமாரின் பேத்தியான சாயிஷா சைகலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அஜய் தேவ்கன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'ஷிவாய்' ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார் சாயிஷா. அதோடு அகில் என்ற தெலுங்கு படத்திலும் இவர் நாயகியாக நடித்துள்ளார்.