ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் செப்டம்பர் 1ல் வெளிவந்தது. மைதிரி மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் கொரட்டாலா இயக்கியிருந்த ஜனதா கேரேஜ் திரைப்படம் விமர்சக ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை ஈட்டி வருகின்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் விசாகபட்டிணத்தில் ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றியைக் கொண்டாட விழா ஏற்பாடு செய்து வந்தார்.
ஜனதா கேரேஜ் படக்குழுவினருடன் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தற்போதைய தகவலின் படி ஜனதா கேரேஜ் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியை ஒத்தி வைக்குமாறு ஜூனியர் என்.டி.ஆர் கூறியுள்ளாராம். விரைவில் ஜனதா கேரேஜ் வெற்றி கொண்டாட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காரணம் கூறாமல் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.