ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் அது மோகன்லால் தான்.. அப்படி இருக்க தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருவதால் நடிகர் பிருத்விராஜும் தனக்கு 'சூப்பர்ஸ்டார்' பட்டம் சூட்டிக்கொண்டாரோ என நினைக்கவேண்டாம். அவர் அப்படி செய்கின்ற ஆளும் அல்ல. அடுத்து அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் 'ட்ரைவிங் லைசன்ஸ்'.. 'கிங் லயர்' வெற்றிப்படத்தை தொடர்ந்து இந்தப்படத்தை இயக்குகிறார் நடிகரும் இயக்குனருமான லால்.
இதற்கு முன் 'மேக்கப் மேன்' என்கிற படத்தில் நடிகர் பிருத்விராஜாகவே சிறப்பு தோற்றத்தில் வந்துபோன பிருத்விராஜ், இதில் படம் முழுவதும் சினிமா ஹீரோவாகவே நடிக்கிறார். விதவிதமான கார்கள் மீது ஆசை கொண்டவராக இவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம்.. பிருத்விராஜூக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிகர் சீனிவாசன் நடிக்கிறார். படத்தில் இவருக்கு போக்குவரத்து அதிகாரி கேரக்டர். கார் ஓட்டுகிறேன் என பிருத்விராஜ் தவறுகள் செய்வதும் அதை கவனித்து அவர்மீது நடவடிக்கை எடுக்க சீனிவாசன் துடிப்பதுமாக எதிரெதிர் கேரக்டர்களில் இருவரும் நடிக்க இருக்கிறர்களாம்.