மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்ய ராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த பாகுபலி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளிவந்து வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது. பாகுபலி தி கன்குலூசன் என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தை 2017 கோடைவிடுமுறையில் வெளியிட இயக்குனர் திட்டமிட்டிருக்கின்றார்.
நாயகன் பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23ல் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பஸ்ட் லுக் பிரபாஸ் பிறந்த நாளில் வெளிவந்தது. அதே போல் இந்த வருடமும் பிரபாஸின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.