சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள சினிமாவை தாண்டி வேறு ஒரு திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்க விரும்பாதவர் தான் மலையாள நடிகை காவ்யா மாதவன். மொழிப்பிரச்சனையை அதற்கு காரணமாக காட்டும் காவ்யா மாதவனுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசைகூட இல்லை. ஆனால் ஷாருக்கானுடன் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாம். ஷாருக்கானின் தீவிர ரசிகையான காவ்யா மாதவன், ஷாருக்கான், கேரளா வந்தபோது அவரை சந்தித்துள்ளார்.
இத்தனைக்கும் ஷாருக்கான் வீற்றிருந்த அந்த விழா மேடையில் சிறந்த நடிகைக்கான பரிசை அவர் முன்னிலையில் பெற்றதையும் அதே நிகழ்வில் ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடியதையும் தனது மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகவே மனதில் வைத்திருக்கிறாராம் காவ்யா மாதவன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது 25 வருடங்காய் மலையாள சினிமாவில் பயணித்துள்ள காவ்யா மாதவன், ஷாருக்கான் படத்தில் நடிக்கும் தனது ஆசையும் ஒருநாள் நிறைவேறும் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.